முகப்பு

தொடக்கம்


பதிப்புரை

சென்னை,  உலகத்தமிழாராய்ச்சி  நிறுவனம் தொல்காப்பிய  நூல்உரைவள வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் வெளியிடப்படும் 18 ஆம்நூல் இடையியல் உரைவளமாகும்.

இதில்     இளம்பூரணர்,   சேனாவரையர்,   தெய்வச் சிலையார்நச்சினார்க்கினியர்   கல்லாடனார்   (1-10சூ.)  உரைகளும், வெள்ளைவாரணனார்,  ஆதித்தர்  ஆகியோரின் உரைகளில் வேண்டியனவும்,சுப்பிரமணிய சாஸ்திரியார் குறிப்புகளும், இக்கால அறிஞர்பெருமக்களின்  கருத்துரைகளும்,   பதிப்பாசிரியர் கருத்துரைகளும்வெளி வருதலுடன், பாவலர் ஏறு ச.   பாலசுந்தரம் எழுதிஅனுப்பிவைத்த இடையியல் உரையும் வெளிவருவதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இடையியல் சூத்திரங்களுக்குஉலகத்தமிழாராய்ச்சி   நிறுவன   ஆய்வாளர்   டாக்டர் ஆல்பர்ட் அவர்களின் ஆங்கில மொழி   பெயர்ப்பு   வெளி வருவதும்குறிப்பிடத்தக்கது.  மற்றைய இயல்களுக்குப் போலவே இவ்வியலுக்கும்டாக்டர்   சி.  இலக்குவனாரின்  ஆங்கில  மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது.

நூலைப்  படிக்கும்  அறிஞர் குறை நிறைவுகளைச்  சுட்டிக் கூறின்திருந்தவும் திருத்தவும் வாய்ப்பாகும்.

நூல் வெளி வர வேண்டிய உதவிகளைச் செய்தோர் புலவர்க.வா. சச்சிதானந்தம், டாக்டர் வை. இரத்தின  சபாபதி  ஆகியோர்.அச்சுப்படிவம்   பார்த்தவர்கள்  செல்வி லலிதா, செல்வி செயலட்சுமி,ஆர் ஆளவந்தார் ஆகியோர்.

எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தருபவர் நிறுவன இயக்குநர் டாக்டர்ச.வே. சுப்பிரமணியன்  ஆவர்.   நல்ல  ஆதரவு தருபவர் நிறுவனத்தலைவரும்   தமிழகக்   கல்வி   அமைச்சரும்   ஆம்  மாண்புமிகுசெ.  அரங்கநாயகம்  அவர்களாவர்.  அழகுற  அச்சிட்டவர்  கோமதிஅச்சக  உரிமையாளர்  திரு. சி. சரவணகுமார்  அவர்கள். இப் பெருமக்கள் யாவர்க்கும் என் நன்றி.

ஆ.சி.
சென்னை
1-8-86


முன் பக்கம்   மேல் அடுத்த பக்கம்