முகப்பு

தொடக்கம்

x

களவியலில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற நான்கு கூறுகளாகக் களவொழுக்கம் கூறப்படுகிறது.

ஒத்த குலமும் ஒத்த பண்புமுடைய காதலரிருவர் ஊழ்வலியால் தற்செயலாய்த் தாமே கண்டு கூடி இன்புறுதலே இயற்கைப்புணர்ச்சியாகும். காதலரிருவருள் காதலன் (தலைவன்) காதலி (தலைவி)யை விட குலத்திலும் பண்பிலும் மிக்கவனாக இருப்பினும் தவறில்லை.

இயற்கைப் புணர்ச்சியில் இன்பம் கண்ட காதலன் அடுத்த நாளும் ‘தந்த தெய்வம் தரும்’ என்று அங்கே சென்று, அவ்வாறே அதே நோக்கத்துடன் அங்கே வந்திருந்த காதலியைக் கண்டு கூடி இன்புறுதல் இடந்தலைப்பாடு ஆகும்.

இத் தகவலைத் தன் பாங்கனுக்குக் கூறி, அவன் மூலமாக அவள் அங்கே வந்திருப்பதை அறிந்து, அவ்விடம் சென்று, அவளைக் கண்டு கூடி இன்புறுதல் பாங்கற் கூட்டமாகும்.

இந் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவளைத் தொடர்ந்து அடையும் வேட்கையால், காதலியின் உயிர்த் தோழியை அறிந்து, அவளை இரந்து வேண்டி, அத்தோழியின் உதவியால் தலைவியை அடைந்து கூடி இன்புறுதல் தோழியிற் கூட்டமாகும்.

களவுப் புணர்ச்சியில் தொடர்புடைய மாந்தர்களாகத் தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி, நற்றாய், தந்தை, தமையன்மார் என்ற எண்மர் களவு வாழ்வில் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் அமைந்துள்ள.

தலைவன்

ஊழ்வலியால் தலைவியை எதிர்ப்பட்ட பொழுது, அவள் அழகுச் சிறப்பைக் கண்டு வியந்து, அவள் மானிடப் பெண் அல்லள் தெய்வம் என்று ஐயுறுவான். அவள் அணிந்த மலரில் வண்டு மொய்த்தல், அவள் அணிந்துள்ள அணிகலன், கண் இமைத்தல், ஆண் மகனைக் கண்டு அஞ்சுதல் போன்ற செயல்களால் அவள் மானிடப் பெண்ணே என்று ஐயம் தவிர்வான்-பின்னர் அவள் கண் பார்வையால் அவள் குறிப்புணர்ந்து அவளை நெருங்கி மெய்தொட்டுப் பயிறல் போன்ற சில செயல்களால் இருவரும் உள்ள ஒத்த பண்பினராகிக் கூடி இன்புறுவர். பின்னர் பாங்கனிடம் கூறுதல், தலைவியின் உயிர்த் தோழியை

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்