xi
அறிதல், தோழியை இரந்து பின்நின்று வேண்டல், தலைவியை அடைந்து கூடி மகிழ்ந்து இன்புறுதல் போன்ற காலங்களிலும் தலைவியைப் பிரியும் பொழுது கலங்குதல் ஆகிய நிலைகளிலும் தலைவன் பேசும் நிலை களவு வாழ்க்கையில் இடம் பெறும். தலைவியைப் பெறாது காமம் கைம்மிக்க விடத்து மடலேறுவதாகத் தலைவன் கூறுவதும் உண்டு. தலைவி தலைவனை எதிர்ப்பட்ட பொழுது தலைவனுக்கு நிகழ்வது போன்ற ஐயம் தலைவிக்கு நிகழாது. தலைவிக்கு ஐயம் நிகழ்ந்தால் அவளுக்கு அச்சம் தோன்றும் அது இயற்கைப் புணர்ச்சிக்குத் தடையாகும். தலைவி நாணமும், மடனும் உடையளாதலின், களவொழுக்கத்தில் குறிப்பான் அறிவித்தல் இன்றி வெளிப்படையாக வேட்கையைக் கூறமாட்டாள். களவொழுக்கக் காலத்தில் அவன் தலையளி மிகுதல் போன்ற சமயங்களில் தன்னிடம் உரிமையும், அவனிடம் பரத்தைமையும் தோன்றக் கூற வேண்டிய இடத்திலும், அயலார் மணம் பேசி வருதல் போன்ற இடத்திலும் தலைவியின் கூற்று நிகழ்தலும் உண்டு. பாங்கன் தலைவனின் உயிர்த் தோழன். ஆகவே தலைவனின் இரகசியங்களை எல்லாம் அறிந்த இயல்புடையவன். தலைவனும் தன் செயல்களை அவனிடம் கூறி, அவன் மூலம் தலைவியை அடைதல் போன்ற நன்மைகளைப் பெறுவான். தோழி தலைவியின் செவிலித்தாயின் மகள் தோழியாவாள். தாய்த் தாய்க் கொண்டு உயிர் ஒன்றாய் வருபவள். பாட்டிக்குத் தலைவியின் செவிலித் தாயின் தாய் உயிர்த் தோழியாகவும், தாய்க்குச் செவிலித்தாய் உயிர்த் தோழியாகவும், தனக்கு அச் செவிலித்தாயின் மகள் தோழியாகவும் வருவது தாய்த் தாய்க் கொண்டு உயிர் ஒன்றாய் வரும் நிலையாகும். அகன் ஐந்தினைக் களவொழுக்கத்தில் தோழியின் பங்கு மிகச் சிறந்தது. இன்றியமையாதது. இயற்கைப்புணர்ச்சி அறிந்து தோழியிற் கூட்டத்திற்கு உதவுதல் முதல் மணம் புரிந்து கொண்டு தலைவி தலைவன் இல்லம் செல்லும் வரை அவள் பணி இன்றியமையாதது. ‘உடன்போக்கு’ போன்ற காலங்களில் எல்லாம் குடும்பப் பண் |