முகப்பு

தொடக்கம்

xi

நாவலர் பாரதியார் எழுதிய நூல்களாவன : தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்), சேரர் தாய முறை (தமிழ், ஆங்கிலம்), சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம்), மாரிவாயில், மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, தொல்காப்பியர் பொருட்படலப்புத்துரை : அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியன.மற்றும் இவர், பல்வேறு இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், ‘தமிழும் தமிழரும்’, ‘அழகு’, ‘திருவள்ளுவர்’, ‘நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சிகள்’ என நூல் வடிவாக்கமும் பெற்றுள்ளன.

இவையனைத்தையும் ‘நாவலர் ச. சோமசுந்தரபாரதியாரின் நூல் தொகுதி’ என்னும் தலைப்பில், தொகுதி தொகுதியாக வெளியிட்டு, உலகோர் அனைவரும் நாவலரின் அரிய ஆய்வுக் கருவூலங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உயர் நோக்கத்தால், நாவலர் பாரதியாரின் அருமைத் திருமகளாரும், ‘ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழக’த் துணைவேந்தருமான டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் அவர்கள், தாமே முன்னின்று பெரும் பொருட் செலவில் கைம்மாறு கருதாமல், இத் தண்டமிழ்ப் பணியைத் தெய்வத் திருப்பணியாகக் கருதி மேற்கொண்டுள்ளனர்!இது, காலத்தினாற் செய்யும் பெருங்கடமையாகும்!

புத்துரைப் பொலிவு

இது, நாவலர் பாரதியார் எழுதிய ‘தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரைகள்’ கொண்ட இரண்டாவது தொகுதியாகும்!

தமிழில் தலைசிறந்த ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட -முழு முதல்நூல் ‘தொல்காப்பியம்’.பண்டைத் தமிழர்தம் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துரைக்கும் அரிய கருவூலம்!இந் நூலுக்கு உரைகண்டவர் பலர்.அவர்கள் தத்தம் காலத்திற்கு ஏற்ப உரைகூறி யமைந்தனர்.அவ்வுரைகளிற் பல, பண்டைத் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் முரண்பாடாகவுள்ளமை கண்டு, புத்துரை கூற விழைந்தார் நாவலர் பாரதியார்.‘எழுத்து, சொல், பொருள்’ எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட இப் பெருநூலில், முன்னிரண்டைவிடப் ‘பொருளதிகாரம்’ தமிழுக்குத் தனிச்சிறப்பு நல்கவல்லது.

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்