xLi
|
‘‘நகரம் இரைந்தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப்பிசையும் இயமர
இசையும் தேரைக் குரலும் போலவும் (மயங்கிசை வண்ணம்) வரும்.
|
‘‘சூறைக் காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது அகவல் வண்ணம்.
‘‘நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது ஒழுகல் வண்ணம்.
‘‘தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கன்மேற் கல்
உருட்டினாற் போலவும் வருவது வல்லிசை வண்ணம்.’’
‘‘அன்ன நடையும் தண்ணம் பறையும் போலவும்
மணன்மேல் நடந்தாற் போலவும் வருவது மெல்லிசை வண்ணம்’’
|
இவ்வாறு தொடுத்து உவமைகளை மழையெனப் பொழிகின்றார்.
|
‘எனப்படும்’ என்னும் சொல்லுக்கு ‘என்று சிறப்பித்துச் சொல்லப்படும்’
எனப் பொருள் கூறி, ‘என’ என்னும் அது சிறப்பினைக் கூறுமோ?’ எனின்,
கூறும்; என்னை?
|
|
‘‘நளியிரு முந்நீர் ஏணியாக’’
|
என்னும் புறப்பாட்டினுள்,
|
|
‘‘முரசு முழங்கு தானை மூவிருள்ளும்
அரசெனப் படுவது நினதே
பெரும’’
|
எனவும்,
|
|
‘‘ஆடுகழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே அத்தை’’
|
எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும்,
|
|
‘‘நாடெனப் படுவது சோழ நாடு’’ ‘‘ஊரெனப் படுவது உறையூர்’’
|
என்று பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக் கொள்க எனத்
தாங்குறித்துக் கூறிய பொருளை இருவகை வழக்குகளாலும் நிறுவிக் காட்டுகின்றார்.
இவ்வாறே நேர், இசை, ஒத்தாழிசை, கொச்சகம், சுரிதகம், அம்போதரங்கம் முதலாய பல சொற்களை
ஆய்ந்து எழுதுகின்றார்.
|
உரையாளராகிய இவர் பெரும் பாவலராகவும் திகழ்ந்தார் என்பது
வெளிப்படை. ஒவ்வோர் இலக்கணமும்,அல்லதுஒவ்வொருபகுதிஇலக்கணமும்
விளக்கிமுடித்துக்காட்டும்
|