(ஐயரவர்கள் நாட்குறிப்பிலிருந்து எடுத்த பாடல்கள்)
ஐயரவர்கள் குறுந்தொகையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது இடைஇடையே பலசிறிய நூல்களையும் ஆய்ந்து வெளியிட்டார்கள். அவற்றுள் தமிழ்நெறி விளக்கமும் ஒன்றாகும்.
இந்நூலில் கிடப்பவை அகப்பொருளைப் பற்றிக் கூறும் பகுதியாகிய 25 சூத்திரங்களே. அவற்றுள்ளும் 25-ஆவது சூத்திர உரையின் பிற்பகுதி
கிடைக்கவில்லை இந்நூலாசிரியர் வகுத்துக் கொண்ட அகப்பொருள் இலக்கணம் இருபத்தைந்து சூத்திரங்களில் முடிவுபெறுகிறது. களவியற்
காரிகை என்னும் நூல் இந்நூலை ஒற்றிச் செல்கிறது.
இந்நூலுள் குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிற்றட்டகம்முதலிய நூல்களிலிருந்து உதாரணமாகச் செய்யுட்கள்
எடுத்தாளப்பட்டுள்ளன. களவியற் காரிகை உரையாசிரியர் சில செய்யுட்களைப் பொருளியல் என்னும்
பெயரோடு எடுத்துக்காட்டுகின்றார். அச்செய்யுட்கள் இந்நூலில் உள்ளன. பரிமேலழகர் ‘வரைந்து
எய்திய பின் தலைமகன் அறம்பொருள் இன்பங்களின் பொருட்டுச் சேயிடையினும், ஆயிடையினும்
தலைமகளைப் பிரிந்து செல்லும்’ என்று கூறுகின்றார். சேயிடைப்பிரிவு, ஆயிடைப்பிரிவு என்பன |