தமிழ்நெறிவிளக்கத்தில் உள்ளன. ஆகவே இவர் பரிமேலழகருக்கு முந்தியவர் என்று தெரிகிறது. உணவைப் பற்றிக் கூறும்போது தருப்பணம் என்று உணவுவகையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தருப்பணம் அவல். 

இத்தகைய ஒப்பற்ற இலக்கண நூலை ஐயரவர்கள் 1937-ம் ஆண்டு தமிழ் உலகிற்கு அளித்தார்கள். அவரது மகனார் திரு. கலியாண சுந்தரையர் 1947-ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக அளித்தார்கள், பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நூல்நிலையம் மூன்றாம் பதிப்பாக வெளியிடுகின்றது. ஒப்பு நோக்குதல் பணியைச் செய்தவர் திருமதி ஆர். புவனேசுவரி அவர்கள்.



 

 

பெசன்ட் நகர்,
சென்னை-90.
26-9-1994

வித்துவான்
சு. பாலசாரநாதன்
ஆராய்ச்சித்துறை
டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம்.