முகப்பு |
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் |
370. மருதம் |
வாராய், பாண! நகுகம்-நேரிழை |
||
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி, |
||
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் |
||
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி, |
||
5 |
'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் |
|
திதலை அல்குல் முது பெண்டு ஆகி, |
||
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என, |
||
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, |
||
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல, |
||
10 |
முகை நாண் முறுவல் தோற்றி, |
|
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே. | உரை | |
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
|