முகப்பு |
ஐயூர் முடவனார் |
206. குறிஞ்சி |
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, |
||
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, |
||
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, |
||
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த் |
||
5 |
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என |
|
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், |
||
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என |
||
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!- |
||
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்? |
||
10 |
கல் கெழு நாடன் கேண்மை |
|
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? | உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|