முகப்பு |
காசிபன் கீரனார் |
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|