முகப்பு |
கூற்றங் குமரனார் |
244. குறிஞ்சி |
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், |
||
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
||
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் |
||
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
||
5 |
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
|
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் |
||
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- |
||
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!- |
||
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த |
||
10 |
செயலை அம் தளிர் அன்ன, என் |
|
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. | உரை | |
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
|