முகப்பு |
சேந்தன் பூதனார் |
261. குறிஞ்சி |
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு |
||
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு |
||
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம், |
||
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி, |
||
5 |
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, |
|
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் |
||
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் |
||
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை, |
||
எருவை நறும் பூ நீடிய |
||
10 |
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.-சேந்தன் பூதனார்
|