முகப்பு |
மதுரைச் சுள்ளம்போதனார் |
215. நெய்தல் |
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி, |
||
பகல் கெழு செல்வன் குடமலை மறைய, |
||
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை, |
||
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர, |
||
5 |
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் |
|
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப; |
||
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து, |
||
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு |
||
தங்கின் எவனோதெய்ய? செங்கால் |
||
10 |
கொடு முடி அவ் வலை பரியப் போகிய |
|
கோட் சுறாக் குறித்த முன்பொடு |
||
வேட்டம் வாயாது எமர் வாரலரே. | உரை | |
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.-மதுரைச் சுள்ளம் போதனார்
|