முகப்பு |
மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் |
322. குறிஞ்சி |
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும் |
||
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை; |
||
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து, |
||
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை, |
||
5 |
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக் |
||
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் |
||
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது, |
||
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் |
||
10 |
அணங்கு என உணரக் கூறி, வேலன் |
|
இன் இயம் கறங்கப் பாடி, |
||
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
|