முகப்பு |
விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் |
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|