முகப்பு |
வினைத்தொழிற் சோகீரனார் |
319. நெய்தல் |
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் |
||
தாது உளர் கானல் தவ்வென்றன்றே; |
||
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், |
||
கூகைச் சேவல் குராலோடு ஏறி, |
||
5 |
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
|
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; |
||
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், |
||
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் |
||
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, |
||
10 |
மீன் கண் துஞ்சும் பொழுதும், |
|
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்
|