முகப்பு |
சேந்தன் |
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! |
உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|