முகப்பு |
அணி வரை மருங்கின் |
344. குறிஞ்சி |
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட |
||
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் |
||
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் |
||
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!- |
||
5 |
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
|
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் |
||
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, |
||
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப் |
||
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி |
||
10 |
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
|
செந் தினை உணங்கல் தொகுக்கும், |
||
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
|