முகப்பு |
அம்ம வாழி....நம்வயின் |
158. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! நம்வயின், |
||
யானோ காணேன்-அதுதான் கரந்தே, |
||
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; |
||
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- |
||
5 |
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
|
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, |
||
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் |
||
வேங்கை முதலொடு துடைக்கும் |
||
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|