முகப்பு |
அரவு இரை தேரும் |
285. குறிஞ்சி |
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் |
||
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை |
||
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, |
||
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, |
||
5 |
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
|
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட |
||
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் |
||
குன்ற நாடன் கேண்மை நமக்கே |
||
நன்றால் வாழி-தோழி!-என்றும், |
||
10 |
அயலோர் அம்பலின் அகலான், |
|
பகலின் வரூஉம், எறி புனத்தானே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
|