அருங்கடி அன்னை

365. குறிஞ்சி
அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
5
சென்மோ வாழி-தோழி!-பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்