முகப்பு |
அல்கு படர் உழந்த |
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! | உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|