முகப்பு |
அழிதக்கன்றே |
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. | உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|