முகப்பு |
அறிந்தோர் அறன் இலர் |
227. நெய்தல் |
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த |
||
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; |
||
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த |
||
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! |
||
5 |
படு மணி யானைப் பசும்பூட் சோழர் |
|
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், |
||
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் |
||
தேர் வழங்கு தெருவின் அன்ன, |
||
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்
|