அறியாமையின் அன்னை

50. மருதம்
அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
5
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என,
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே-
செறுநரும் விழையும் செம்மலோன் என,
10
நறு நுதல் அரிவை! போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ