முகப்பு |
இகுளை தோழி |
332. குறிஞ்சி |
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- |
||
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு, |
||
நாளும்நாள் உடன் கவவவும், தோளே |
||
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண் |
||
5 |
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, |
|
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி |
||
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி, |
||
தலைநாள் அன்ன பேணலன், பல நாள், |
||
ஆர் இருள் வருதல் காண்பேற்கு, |
||
10 |
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
|