முகப்பு |
இசைபட வாழ்பவர் |
217. குறிஞ்சி |
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் |
||
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், |
||
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது |
||
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, |
||
5 |
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
|
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து |
||
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு |
||
புலம்பு சேண் அகல நீக்கி, |
||
புலவி உணர்த்தல் வன்மையானே. | உரை | |
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.
|