முகப்பு |
இதுவே, நறு வீ |
96. நெய்தல் |
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், |
||
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, |
||
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, |
||
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, |
||
5 |
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
|
துவரினர் அருளிய துறையே; அதுவே, |
||
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் |
||
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, |
||
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு |
||
10 |
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
|
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
|