முகப்பு |
இவளே கானல் |
45. நெய்தல் |
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, |
||
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு |
||
மீன் எறி பரதவர் மகளே; நீயே, |
||
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
||
5 |
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
|
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, |
||
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? |
||
புலவு நாறுதும்; செல நின்றீமோ! |
||
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை |
||
10 |
நும்மொடு புரைவதோ அன்றே; |
|
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! | உரை | |
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
|