முகப்பு |
இளமை தீர்ந்தனள் |
351. குறிஞ்சி |
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை |
||
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள் |
||
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் |
||
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி |
||
5 |
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள் |
|
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த |
||
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து, |
||
சிறு தினை வியன் புனம் காப்பின், |
||
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே. | உரை | |
தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்
|