முகப்பு |
உயிர்த்தன வாகுக |
163. நெய்தல் |
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- |
||
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு |
||
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் |
||
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, |
||
5 |
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
|
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி |
||
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் |
||
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, |
||
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் |
||
10 |
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
|
வைகுறு வனப்பின், தோன்றும் |
||
கைதைஅம் கானல் துறைவன் மாவே! | உரை | |
வரைவு மலிந்து சொல்லியது.
|