ஊசல் ஒண் குழை

286. பாலை
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,
5
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின்-ஆயிழை!-நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ-தோழி!-அவர் சென்ற திறமே?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்