முகப்பு |
என் எனப்படுமோ |
228. குறிஞ்சி |
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு |
||
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, |
||
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், |
||
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து |
||
5 |
அருளான்கொல்லோ தானே-கானவன் |
|
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், |
||
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, |
||
அழுந்துபட விடரகத்து இயம்பும் |
||
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? | உரை | |
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்
|