முகப்பு |
ஒலி அவிந்து |
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. | உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|