முகப்பு |
ஓங்கு மணல் உடுத்த |
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! |
உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|