முகப்பு |
வேட்டம் பொய்யாது |
38. நெய்தல் |
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
||
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
||
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
||
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
||
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
||
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
||
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
||
பெண்ணை இவரும் ஆங்கண் |
||
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. | உரை |
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|