முகப்பு |
கருங்கால் வேங்கைச் செவ் வீ |
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? | உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|