முகப்பு |
கல் அயற் கலித்த |
383. குறிஞ்சி |
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை |
||
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை |
||
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி |
||
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு, |
||
5 |
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள், |
|
அருளினை போலினும், அருளாய் அன்றே- |
||
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் |
||
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு, |
||
ஓங்கு வரை நாட! நீ வருதலானே. | உரை | |
தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.-கோளியூர்கிழார் மகனார் செழியனார்
|