முகப்பு |
கவர் பரி நெடுந் |
307. நெய்தல் |
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; |
||
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; |
||
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த |
||
திதலை அல்குல் நலம் பாராட்டிய |
||
5 |
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்: |
|
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
||
மா அரை மறைகம் வம்மதி-பானாள், |
||
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் |
||
மெல் இணர் நறும் பொழில் காணா |
||
10 |
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. | உரை |
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்
|