முகப்பு |
சிலரும் பலரும் |
149. நெய்தல் |
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
||
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
||
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
||
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
||
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
||
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
||
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
||
செலவு அயர்ந்திசினால், யானே; |
||
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! | உரை |
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|