சிறுகட் பன்றிப்

386. குறிஞ்சி
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
5
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ,
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என,
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
10
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப