முகப்பு |
சிறு மணி |
220. குறிஞ்சி |
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ, |
||
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி, |
||
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன் |
||
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், |
||
5 |
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி |
|
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண், |
||
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர் |
||
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் |
||
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு |
||
10 |
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! | உரை |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்
|