முகப்பு |
சிறு வெள்ளாங்குருகே |
70. மருதம் |
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
||
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
||
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
||
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
||
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
||
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
||
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
||
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|