முகப்பு |
சுனைப் பூக் குற்றும் |
173. குறிஞ்சி |
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
||
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
||
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
||
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
||
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
||
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், |
||
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
||
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
||
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. | உரை |
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|