முகப்பு |
சூருடை..... மால் பெயல் |
268. குறிஞ்சி |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, |
||
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, |
||
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த |
||
5 |
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் |
|
காதல் செய்தவும் காதலன்மை |
||
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், |
||
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு |
||
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. | உரை | |
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம்.-வெறி பாடிய காமக்கண்ணியார்
|