தந்தை வித்திய

306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
5
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல்
10
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்