முகப்பு |
நிலவும் மறைந்தன்று |
182. குறிஞ்சி |
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
||
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
||
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
||
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
||
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
||
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
||
கீழும் மேலும் காப்போர் நீத்த |
||
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
||
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! | உரை |
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|