முகப்பு |
நின் குறிப்பு எவனோ |
357. குறிஞ்சி |
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு |
||
என்னொடு நிலையாதுஆயினும், என்றும் |
||
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- |
||
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், |
||
5 |
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
|
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, |
||
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை |
||
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, |
||
நீர் அலைக் கலைஇய கண்ணிச் |
||
10 |
சாரல் நாடனொடு ஆடிய நாளே. | உரை |
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி
|