முகப்பு |
நீயே, அடி அறிந்து |
156. குறிஞ்சி |
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம் |
||
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும், |
||
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!- |
||
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள் |
||
5 |
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், |
|
பகல் வந்தீமோ, பல் படர் அகல! |
||
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி |
||
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்; |
||
பாடு இமிழ் விடர் முகை முழங்க, |
||
10 |
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. | உரை |
இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்
|