முகப்பு |
நெகிழ்ந்த தோளும் |
309. குறிஞ்சி |
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
||
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
||
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் |
||
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக் |
||
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
||
விழுமமாக அறியுநர் இன்று' என, |
||
கூறுவைமன்னோ, நீயே; |
||
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. | உரை | |
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|